தமிழ்நாட்டில் ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ட்(கால்நடை ஆலோசகர்) 7 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc.,& A) முடித்திருப்பதோடு, கம்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் டூவீலர் ஓட்ட தெரிந்து லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
இருப்பினும் இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Individual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும்.
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் நேரடியாக வரும் 29ம் தேதி நடக்கும் காலை 11 மணிக்கு நடக்கும் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், பயோடேட்டாவுடன் செல்ல வேண்டும். மார்ச் 29 நேர்க்காணலில் பங்கேற்க விரும்புவோர் Aavin Dairy, ‛O’ Siruvayal Road, Kalanivasal, Karaikudi, Sivagagai, District 630 002. என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.