இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பாக செயல்திட்டங்களை உருவாக்க கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில், பல்வேறு துறை அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய அமைப்புகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் இணைந்து 6ஜி தொழில்நுட்ப புத்தாக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று, பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டு, 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனை அமைப்பையும், சர்வதேச தொலைத்தொடர்பு பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “5ஜி தொழில்நுபட்பத்தை மிக வேகமாக அறிமுகப்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட 120 நாட்களிலேயே 125 நகரங்களுக்கு இந்த சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் 6ஜி தொலை தொடர்பு சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2030க்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.