TNLDA Recruitment 2024 ;
தமிழ்நாடு அரசின் கால்நடை அபிவிருத்தி முகமை (Tamil Nadu Livestock Development Agency) சென்னையில் அமைந்துள்ளது. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் துறையின் கீழ் இயங்குகிறது. இந்திய அரசின் பசு மற்றும் எருமை வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பால் உற்பத்தி மற்றும் விலங்குகள் இனபெருக்கம் ஆகியவற்றை மேம்படுத்தை இந்த நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள் :
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
ஐடி நிர்வாகி(IT Executive) | 2 |
கால்நடை மருத்துவர் | 2 |
பணிக்கான வயது வரம்பு :
- தமிழ்நாடு அரசின் கால்நடை அபிவிருத்தி முகமையில் உள்ள ஐடி நிர்வாகி பணியிடத்திற்கு வயது வரம்பு அதிகபட்சமாக 35 வயது வரை இருக்கலாம்.
- கால்நடை மருத்துவர் பதவிக்கு வயது வரம்பு அதிகபட்சமாக 35 வயது வரை இருக்கலாம்.
- சம்பள விவரம் :
- தமிழ்நாடு அரசின் கால்நடை அபிவிருத்தி முகமையில் ஐடி நிர்வாகி பதவிக்கு ரூ.50,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
- பணிக்கான கல்வித்தகுதி;
- கால்நடை மருத்துவர் பதவிக்கு மாத சம்பளமாக ரூ.56,000 வழங்கப்படும்.
- ஐடி நிர்வாகி பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் கணினி அறிவியல் அல்லது தகவல் தொடர்பியலில் பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலை முடித்திருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- கால்நடை மருத்துவர் பதவிக்கு இளங்கலை கால்நடை மருத்துவம் (BVSc & AH)அல்லது முதுகலை கால்நடை மருத்துவம் (M.V.Sc in Animal Husbandry Economics/Animal Husbandry Statistics) முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கால்நடை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். சென்னை மற்றும் சென்னை சுற்று வட்டாரப் பகுதியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10ஆம் வகுப்பு அளவிலான தமிழ் மொழி தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை ;
தமிழ்நாடு அரசின் கால்நடை அபிவிருத்தி முகமையில் ஐடி நிர்வாகி மற்றும் கால்நடை மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு என்ற இணைய முகவரியில் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
தமிழ்நாடு அரசின் கால்நடை அபிவிருத்தி முகமையில் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, பான் அட்டை, வீட்டு முகவரி சான்று, கல்வித்தகுதி சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ் மற்றும் சுயவிவரங்கள் அடங்கிய படிவம் ஆகியவற்றை ஆன்லைன் வழியாக இணைக்க வேண்டும்.
பணிக்கான முக்கிய நாட்கள் :
விவரம் | முக்கிய நாட்கள் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 26.07.2024 மாலை 5.45 மணி வரை |
நடைபெறும் நாள் | பின்னர் அறிவிக்கப்படும் |