பேக்கிங் உணவுகளில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்து லேபிள்களை படிப்பது மிகவும் முக்கியமானது.பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்து விவரங்கள் குறித்த லேபிள்கள் பெரிதாகவும், அதில் இடம் பெறும் தகவல்கள் நுகர்வோரின் கண்களுக்கு இன்னும் நன்றாக புலப்படும் வகையில் நன்கு தடித்த எழுத்துக்களில் அதாவது போல்ட் லெட்டர்களில் (bold letters) மற்றும் அதன் ஃபான்ட் சைஸ் பெரிதாகவும் இருக்க வேண்டும் என்பதயும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. கடைகளில் விற்கப்படும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து குறித்த விவரங்கள் நுகர்வோருக்கு சரியாக தெரிய வேண்டும் என்பதற்கான முயற்சியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்து விவரங்கள் குறித்த லேபிள்கள் பெரிதாகவும், அதில் இடம் பெறும் தகவல்கள் நுகர்வோரின் கண்களுக்கு இன்னும் நன்றாக புலப்படும் வகையில் நன்கு தடித்த எழுத்துக்களில் அதாவது போல்ட் லெட்டர்களில் (bold letters) மற்றும் அதன் ஃபான்ட் சைஸ் பெரிதாகவும் இருக்க வேண்டும் என்பதயும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.
கடைகளில் விற்கப்படும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து குறித்த விவரங்கள் நுகர்வோருக்கு சரியாக தெரிய வேண்டும் என்பதற்கான முயற்சியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உணவுப் பொருட்களை வாங்கும் போது மக்கள் அந்த தயாரிப்பில் இருக்கும் விவரகளை அறிந்து கொண்டுஅதை வாங்கலாமா? வேண்டாமா? என அவர்களுக்கு முடிவுகளை எடுக்க உதவும். அதே போல பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் லேபிள்களில் அந்த தயாரிப்பில் இருக்கும் மொத்த சர்க்கரை அளவு, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) போன்ற விவரங்கள் நுகர்வோர் கண்களுக்கு சட்டென்று தெரியும் வகையில் மிக முக்கியமாக வெளிப்படுத்த வேண்டும் என்று நிறுவனங்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தலைவரான அபூர்வ சந்திரா தலைமையில் நடைபெற்ற 44-வது FSSAI கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர விதிமுறைகள் (லேபிளிங் மற்றும் டிஸ்பிளே) திருத்தம், 2020-க்கு ஒப்புதல் அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை பதிவு செய்ய கூறப்பட்ட திருத்தத்திற்கான வரைவு அறிவிப்பு (draft notification) பொது களத்தில் வைக்கப்படும்.இந்த நடவடிக்கை ஏன் முக்கியம்?பேக்கிங் செய்யப்பட்ட ஒரு உணவு பொருளை வாங்கும் முன் அதிலிருக்கும் ஊட்டச்சத்து பற்றிய தகவல்களை தயாரிப்பு லேபிள் பார்த்து படித்து தெரிந்து கொள்வது, தகவலறிந்து நல்ல உணவுகளை தேர்வு செய்யவும், நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணுவதற்கும் முக்கியமானது. ப்ராடக்ட் லேபிள் என்பது அந்த உணவில் அடங்கியுள்ள கலோரி எண்ணிக்கை, மேக்ரோநியூட்ரியன்ட் கலவை (கார்போஹைட்ரேட்ஸ், ப்ரோட்டீன்ஸ் மற்றும் கொழுப்புகள் போன்றவை), வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ் ஃபேட்ஸ் அல்லது அதிகப்படியான சர்க்கரைகள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உட்பட தயாரிப்பின் ஊட்டச்சத்து உள்ளடக்கம் பற்றிய அனைத்து அத்தியாவசிய விவரங்களையும் நுகர்வோருக்கு தெரியப்படுத்துகிறது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது உணவு ஒவ்வாமை போன்ற நிலைமைகள் உள்ள நபர்கள் அவர்கள் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பேக்கேஜ்ட் உணவில் இருக்கும் ஃபுட் லேபிள்ஸ் மூலம் அதிலிருக்கும் சர்க்கரைகள், சோடியம் மற்றும் தங்களுக்கு அலர்ஜியாக கூடிய பொருட்கள் அதில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே அவர்கள் பேக்கிங் உணவுகளால் கொடுக்கப்படும் ஊட்டச்சத்து லேபிள்களை படிப்பது மிகவும் முக்கியமானது.
அதே போல பல நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள ஊட்டச்சத்து தகவல்களை ஒப்பிட்டு பார்த்து அதில் எது தங்களுக்கு தேவை என்று பார்த்து வாங்குவது, நுகர்வோர் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து பயன்படுத்த உதவுகிறது. மேலும் எடை மேலாண்மைக்கு முக்கியமானது கலோரி நுகர்வை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உடல் பருமன் அல்லது இதய நோய்கள் போன்ற உணவு தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளை தடுக்கிறது.
எனவே பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் ஊட்டச்சத்து லேபிள்களை படித்து பார்த்து வாங்கலாமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பது, தனிப்பட்ட ஒரு நபரின் நல்வாழ்வை உறுதி செய்யும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமான உணவு சூழலுக்கு பங்களிக்கும் முடிவுகளை எடுக்க நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கும்.