தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவானது இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் மாணவர்களிடையே பேசியதாவது:-
வந்திருக்கும் இளம் சாதனையாளர் அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழக வெற்றிக்கழகத்தின் தோழர்களுக்கு, என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நன்பிகள் அனைவருக்கும் எனது வணக்கம்.
நீட் தேர்வு
நீட் தேர்வு என்பது குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்காக்கூடிய ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் சத்தியமான உண்மை. நீட் பற்றி 3 பிரச்சனையாக பார்ப்பது என்னவென்றால், மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975முன்பு கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. அதுக்கு பின்பு தான் ஒன்றிய அரசு வந்த பின்பு பொதுப்பட்டியலில் சேர்த்தார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்வு
இரண்டாவது ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு, இது கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரானதாக நான் பார்க்கிறேன். ஒரு மாநிலத்திற்கும் ஏற்ற மாரி பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேக்கல. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
பன்முகத்தன்மை
பன்முகத்தன்மை என்பது அது பலமே தவிர பலவீனம் என சொல்ல முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மாநில மொழில படிச்சிட்டு, ஸ்டேட் சிலபஸ் ல படிச்சிட்டு, என்சிஆர்டி சிலபஸ்ல தேர்வு வச்சா அதுவும் கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்கள் அதுவும் மருத்துவப்படிப்புக்கு யோச்சு பார்க்க வேண்டும். இது கடினமான விஷயம்.
குளறுபடிகள்
3-வதாக நீட் தேர்வு மே-5-ந் தேதி நடந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததை நாம் பார்த்தோம். நீட் தேர்வு மேல் இருந்த நம்பிக்கையை போச்சு. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை என்பது தான் செய்திகள் மூலம் புரிஞ்சிக்கிட்ட விஷயம்.
இதற்கு என்னதான் தீர்வு என்னவென்றால் நீட் விலக்கு தான் உடனடி தீர்வு. தமிழக சட்டமன்றம் கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனதார வரவேற்கிறேன். ஒன்றிய அரசு இதற்கு காலதாமதம் செய்யாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரம் தீர்வு காண வேண்டும்.
நிரந்தர தீர்வு
இதற்கு நிரந்தர தீர்வு என்னவென்றால் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். ஒருவேலை இதற்கு சிக்கல் இருக்கிறது என்னவென்றால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி அதில் ஸ்பெஷல் கண்கரண்ட் லிஸ்ட் சிறப்பு பொதுப்பட்டியல் உருவாக்கி, அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.
பொதுப்பட்டியலில் உள்ள பிரச்சனை
பொதுப்பட்டியலில் உள்ள பிரச்சனை என்னவென்றால் துறைகள் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும், முழு உரிமை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஒன்றிய அரசு அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்தி கொள்ளலாம்.
யோசனை தான்
இது என்னுடையை யோசனை தான் தவிர.இது உடனே நடக்காது என்று தெரியும், நடந்தாலும் நடக்க விடமாட்டார்கள் என்றும் எனக்கு தெரியும். அதனால் இந்த யோசனை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜாலியா படிங்க
இதனைத்தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய அவர் , ஜாலியாக படிங்க. உலகம் மிகவும் பெரியது. நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதில் ஒன்னு ரெண்டு மிஸ்பண்ணா கூட கவலை படாதீங்க. கடவுள் மிகப்பெரிய வாய்ப்பை உங்களுக்கு கொடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.