அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில் திடீரென சென்னைக்கு கிளம்பியுள்ளார் அஜித்.
அஜித் மற்றும் மகிழ் திருமேனியின் கூட்டணியில் விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. லைக்காவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் என பலர் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரியாமல் அஜித் ரசிகர்கள் தவித்தனர். ஏற்கனவே துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படம் துவங்க பல மாதம் தாமதமாகிவிட்டது. மற்ற நடிகர்களின் படங்களும் படத்தை பற்றிய அப்டேட்டும் அடுத்தடுத்து வந்துகொண்டு இருப்பதை பார்த்து அஜித் ரசிகர்கள் ஏக்கத்திற்கு ஆளாகினார்கள்.
எனவே தொடர்ந்து அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படக்குழுவிடம் அப்டேட் கேட்டு வந்தனர். மேலும் அஜித் தன் அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டு அப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். எனவே ஒருசிலர் விடாமுயற்சி படம் அவ்வளவுதான், கைவிடப்பட்டது என்றெல்லாம் வதந்திகளை பரப்பினார்கள்.
இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விடாமுயற்சி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் துவங்கியது. சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மீண்டும் துவங்கியது. அஜித் உட்பட த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் இப்படப்பிடிப்பில் இணைந்தனர்.
எனவே சொன்னபடி இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில் அஜித் தற்போது அஜர்பைஜானில் இருந்து சென்னைக்கு திரும்பி இருக்கின்றார். இதை அறிந்த ரசிகர்கள் மீண்டும் படப்பிடிப்பிற்கு எதாவது சிக்கல் ஏற்பட்டுள்ளதா என பதறினார்கள்.
ஆனால் அஜித் தன் சொந்த வேலை காரணமாகத்தான் சென்னைக்கு திரும்பியுள்ளார் என்றும், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் மீண்டும் அஜர்பைஜானிக்கு சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகின்றது. எனவே அடுத்த மாதத்திற்குள் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.