நெருக்கடியான சமயத்தில், அழுத்தங்களை சமாளித்து, நான் அந்த கேட்சை பிடிக்க இவர்தான் காரணம் என சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
பரபரப்பு கட்டம்:
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு 6 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது, டேவிட் மில்லர் கலத்தில் இருந்தார். அப்போது, ஹர்திக் பாண்டியாதான் ஓவர் வீச வந்தார்.
முதல் போட்டி:
ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்து, லோ புல்டாஸாக மில்லருக்கு சென்றது. அதனை, டேவிட் மில்லர் ஓங்கி அடித்த நிலையில், மிட் ஆப் திசையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ், கேட்ச் பிடித்து பந்தை தூக்கிபோட்டுவிட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியே சென்று, பிறகு உடனே உள்ளே வந்து, தூக்கிப்போட்ட பந்தை கேட்ச் பிடித்து, மில்லரை அவுட் ஆக்கினார்.
த்ரில் வெற்றி:
மில்லரை முதல் பந்திலேயே வெளியேற்றிவிட்ட நிலையில், அடுத்து ரபாடா, மகாராஜ் ஆகிய பௌலர்கள்தான் களத்தில் இருந்தனர்.. அவர்களுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசியதால், இறுதியில், இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.
சர்ச்சையாகும் கேட்ச்:
கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் சர்ச்சைக்கு உள்ளானது. காரணம், பவுண்டரி ரோப் சற்று தள்ளி இருந்தது. பவுண்டரி ரோப் இருந்த தடம் அப்படியே தெரிந்த நிலையில், அந்த தடத்தில் மிதித்துதான் சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தார். இந்நிலையில், இது மிகப்பெரிய சர்ச்சையாகி, விவாதப்பொருளாக மாறியது.
ரோப் தள்ளிப்போனது எப்படி?
பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ்தான், பவுண்டரி ரோப்பை பின்னுக்கு தள்ளி வைத்தார் என பலர் விமர்சித்தனர். ஆனால், அது உண்மை கிடையாது என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது
பிட்ச் விதிமுறைதான் காரணம்:
ஒரு பிட்சில், மூன்று பௌலிங் பிட்ச் வரை இருக்கலாம். ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு பௌலிங் பிட்சை பயன்படுத்துவது வழக்கம். பார்படாஸ் பிட்சில், கடந்த போட்டிக்கு பயன்படுத்திய பிட்சை, பைனலுக்கு பயன்படுத்தவில்லை, அருகில் இருந்த பிட்சை பயன்படுத்தினார்கள். இதனால், பவுண்டரி அளவு மாறுபடும். அந்த மாறுபாட்டை போக்குவதற்காக, போட்டி துவங்குவதற்கு முன்பே, பவுண்டரி ரோப்பை சில அடி தூரம், முன்னும் பின்னும் தகர்த்தி வைத்தனர்.
போட்டிக்கு முன்பை:
அதேபோல், பார்படாஸ் பிட்ச் ரோப்பை, போட்டிக்கு முன்பே சில அடி தூரம் முன்பும், பின்பும் மாற்றியமைத்தனர். இதனால்தான், சூர்யகுமார் யாதவ் நின்றிருந்த இடத்தில், பவுண்டரி ரோப் சற்று பின்னுக்கு தள்ளி இருந்தது. இது சீட்டிங் கிடையாது என இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர்கள், விளக்கம் அளித்து வருகிறார்கள்.
கேட்ச் பிடித்தது எப்படி?இந்நிலையில், அழுத்தங்கள் நிறைந்த அந்த நேரத்தில், சிறப்பாக கேட்ச் பிடித்தது எப்படி என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்தார். அதில், ‘‘இப்போட்டி துவங்குவதற்கு முன், ரோஹித் சர்மா எங்களுடன் உரையாற்றினார். அப்போது, ‘கோப்பை வெல்ல கேப்டனால் மட்டும் முடியாது. நீங்கள் அனைவரும் கேப்டனைப் போல பொறுப்பாக செயல்பட வேண்டும். உங்களது அனைவரின் முழு ஆற்றலும் தேவை. ஒவ்வொரு நொடியையும், 100 சதவீதம் சிறப்பாக செலவு செய்யுங்கள்’’ எனக் கூறினார். அந்த உரைதான், என்னை மேலும் பலப்படுத்தியது. கேட்ச் பிடிக்கும் போது, எந்த ஒரு பதற்றத்தையும் உணரவில்லை’’ என்றார்.