வணக்கம்…!
வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் சொந்தமாக ஏதாவது ஒரு தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும்.
இடவசதி:
இந்த தொழிலை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே தொடங்கலாம்.
முதலீடு:
இந்த தொழில் தொடங்குவதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது.இன்றைய நிலையில் பலரும் கேன் தண்ணீரை தான் குடிக்கிறார்கள். அதனால் இந்த தொழிலை நீங்கள் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
Water Can Business:
நீங்கள் வாட்டர் கேன் சப்ளை செய்பவர்களிடம் இருந்து டீலர்ஷிப் பெற வேண்டும்.உங்களிடம் ஒரு வண்டி இருந்தால் வாட்டர் கேன்களை வாங்கி வந்து அதை உங்கள் பகுதிகளில் விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் தினமும் ஒரு நல்ல வருமானத்தை பெறலாம்.கேன் தண்ணீரை அதிகமாக பயன்படுத்துவதால் மக்கள் கட்டாயம் உங்களை தேடி வருவார்கள்.இதனால் அதிக லாபம் கிடைக்கும்.