நகரத்தில் இருப்பவர்களுக்கு இதுவொரு நல்ல தொழில். ஆண்டு முழுவதும் லாபம் தரும் மாவு ஆலை தொழில்.தொழில்களில் எப்போது சரிவே காணாத தொழில்கள் என்றால் அது உணவு தொடர்பான தொழில்தான்.அதில் நீங்களும் இணைய எளிய தொழிலே இட்லி தோசை மாவு அரைத்து வியாபாரம் செய்வது.
ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் மாவு பிரதான உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.தற்போதைய வேகமான காலத்தில் தினமும் மாவை ஊரவைத்து முறையாகச் செய்ய யாருக்கும் நேரமில்லை. இதில் உங்களுக்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் மட்டும் இல்லாமல் உணவகங்கள் கூட வாடிக்கையாளர்களாகக் கிடைப்பார்கள்.
வழக்கமான அரிசி மாவுடன் பலதானிய மாவு பயன்படுத்தும் போக்கும் இப்போது அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் இந்த வாய்ப்பைப் கோதுமை, தினை, உளுந்து, மக்காச்சோளம், ராகி, உளுத்தம் பருப்பு போன்ற தானியங்களை சரியான அளவில் அரைத்து விற்பனை செய்யலாம்.
முதலீடு :
உங்களிடம் முதலீடு செய்ய அதிக பணம் இருந்தால், தானியங்களை அரைப்பதற்கும் மாவு பேக்கிங் செய்வதற்கும் பெரிய இயந்திரத்தை வாங்கலாம்.மாவு தாயார் செய்ய 10க்கு 10 அடி இடம் இருந்தால் போதுமானது.ஒருவேளை, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், நீங்கள் ஒரு வழக்கமான மாவு ஆலையை ஒரு சிறிய இடத்தில் தொடங்கலாம்.
சந்தையில் மொத்த விலைக்கு தானியங்களை வாங்கி அரைத்து விற்க வேண்டும். அப்போதுதான் லாபம் கிடைக்கும்.வழக்கமான அரிசி மாவுடன், நீங்கள் மாவு ஆலையில் பல வகையான பொருட்களை தயார் செய்யலாம்.
எந்த வித உணவு தாயரிப்பு தொழில்களாக இருந்தாலும் அதற்குக் கண்டிப்பாக Fssai பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும்.தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் இணைந்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 கீழ் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.
இட்லி தோசை மாவு எப்படிதாயார் செய்வது:
வீட்டு உபயோகத்திற்கு என்று இல்லாமல் வியாபாரத்திற்கு என்றால் தினசரி வியாபாரத்திற்கு என்று ஏற்றவாறு மாவு அரைக்க வேண்டும். 1 கிலோ அரிசி என்றால் அதற்கு 200 கிராம் வரை உளுந்து போட்டுக்கொள்ள வேண்டும்.
மக்காச்சோளம், தினை, ராகி போன்றவற்றை பருவத்திற்கு ஏற்ப மாவு தயாரித்து விற்பனை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி,
உளுந்து ,
வெந்தயம்.
அரைக்கும் முறை :
1 கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து சேர்க்க வேண்டும். சிறிதளவு வெந்தயம் உளுந்துடன் சேர்த்து ஊரவைக்க வேண்டும். இரண்டையும் சுமார் 4 -5 மணி நேரம் வரை ஊரவைக்க வேண்டும்.அதற்குப் பின்னர் தனித் தனியாக அரைத்து பின்னர் ஒன்றாகச் சேர்த்து உப்புடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். சுமார் 8 மணி நேரமாவது மாவு தாயார் ஆக தேவை. அதனால் அடுத்த நாள் காலை மாவுக்கு இரவே அரைத்து வைக்க வேண்டும்.
இதனுடன், நீங்கள் ஒரு சிறிய இயந்திரத்தை நிறுவுவதன் மூலம் மசாலா அரைக்க ஆரம்பிக்கலாம்.
விநோக்கிக்கும் முறை:
மாவு பாக்கெட்களை வாடிக்கையாக சில கடைகளில் விற்பனைக்குக் கொடுக்கலாம்.
சூப்பர் மார்கெட் போன்ற கடைகளில் ஆர்டர் பெறும் வகையில் வியாபாரம் செய்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 2000 பாக்கெட் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.
இதில் நீங்கள் அதிக மூலதனத்தை முதலீடு செய்ய வேண்டியதில்லை. ஆனால் வருமானம் இரட்டிப்பாகும்.
லாபம்:
மாவு மில் தொழிலில் இருந்து மாதம் 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்க முடியும்.அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.50,000 வரை தனி நபராக லாபம் பெறலாம்.